ஆண்டுதோறும் மார்ச் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் 70 முதல் 80 சதவீதம் பேர் கண்ணீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்ணீர் அழுத்த நோயானது வருகிற 2040 ஆம் ஆண்டில் 112 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2040 ஆம் ஆண்டில் சுமார் 32 சதவீதம் உலக அளவில் கண்ணீர் அழுத்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கண்ணீர் அழுத்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பார்வை இழக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கண்ணீர் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் கண் மருத்துவர்கள், கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.