தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் நெருக்கமான அலையாத்தி காடுகள் அதிக அளவு காணப்படும். இந்த கடல் பகுதிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மஞ்சள் மூக்கு நாரை எனப்படும் பிளமிங்கோ வகையைச் சேர்ந்த பறவைகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளன.
இந்த பறவையின் அலகுகள் மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படும். சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிற சிறகுகள் காணப்படும். இந்த பறவை ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து இங்குள்ள கடற்கரையை ஒட்டி உள்ள அலையாத்தி காடுகளுக்கு இடையே இருக்கும் உடைமரத்தில் கூடுகள் கட்டி முட்டையிடுவது வழக்கம். குஞ்சு பொரித்து சிறிது வளர்ந்த பிறகு மீண்டும் இவை ஆஸ்திரேலியாவிற்கு சென்று விடும்
தற்போது தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதி, கோவளம் கடற்கரை பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டு மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளது, இந்தப் பறவைகள் அதிகாலை முதல் 9 மணி வரை மட்டுமே அந்த பகுதிகளில் இறைதடி விட்டு வெயிலின் தாக்கம் வந்ததும் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்று விடுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவளம் கடற் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது