ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்!

80பார்த்தது
ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்!
தூத்துக்குடியில் ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டரில், மேலாளரை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் 6பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவில் தெருவில் உள்ள தியேட்டரில் தனுஷ் நடித்த ராயன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நேற்று இரவு காட்சிக்கு வந்த ரசிகர்கள் 6பேர் மது போதையில் இருந்ததாக கூறி தியேட்டர் மேலாளர் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் சதீஷ்குமார் (33) என்பவர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டாராம்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தியேட்டர் மேலாளரை தாக்கி அவர் மீது பைக்கை மோதி கொலை செய்ய முயன்றார்களாம். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 6பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி