கலைஞர் பிறந்த நாள்: சைக்கிள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!

56பார்த்தது
கலைஞர் பிறந்த நாள்: சைக்கிள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!
தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளையொட்டி கட்சியின் மூத்த முன்னோடிக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினாா்.

தூத்துக்குடி கலைஞர் 101வது பிறந்தநாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 3 தொகுதிகளிலும் ஓராண்டு முழுவதும் நலத்திட்டஉதவிகள் வழங்கி கொண்டாடப்படும் என்று போடப்பட்ட தீர்மானத்தின் படி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் கட்சியின் மூத்த முன்னோடி ஓருவருக்கு வடக்குமாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர்உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் உலகநாதன், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி