தூத்துக்குடியில் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் தர்மலிங்கம் (36), இவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மோசடி வழக்கில் தனது மனைவியுடன் கைதானார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தூத்துக்குடி கோட்டில் நடந்து வருகிறது நேற்று கணவன் மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வரும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இதில் மனம் உடைந்த தர்மலிங்கம் தனது வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.