தூத்துக்குடி: மாவட்டத்தில் 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம்.. காவல்துறை

82பார்த்தது
தூத்துக்குடி: மாவட்டத்தில் 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம்.. காவல்துறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை நிலுவையில் இருந்த 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த எதிரிகள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை 689 எதிரிகளுக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரிகள் தொடர்ந்து ஆஜராகாமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையால் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி