அண்ணா சிலை செயற்கை நீரூற்று பணிகள்: மேயர் ஆய்வு

50பார்த்தது
அண்ணா சிலை செயற்கை நீரூற்று பணிகள்: மேயர் ஆய்வு
தூத்துக்குடி அண்ணா சிலை அருகில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாகவும் இரவிலும் ஒளிரும் வண்ணம் பிரதான சந்திப்புகளில் மின்விளக்குகளும் அமைத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக பேரறிஞர் அண்ணா சிலையின் பின்புறம் நடைபெற்று வரும் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகளையும்,

மாநகரிலிருந்து திருநெல்வேலி சாலையை இணைக்கும் பகுதியிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரும்பும் பகுதியிலும் ஹைமாஸ் விளக்குகள் அமையப்போகும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இந்தப் பணிகளானது வரும் நாட்களில் நிறைவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி