தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 52 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
விழாவில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆணையர் தினேஷ்குமார் மாநகராட்சி உதவி ஆணையர் ராஜாராம், பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் சரவணன், மண்டல உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், பிரின்ஸ், சந்திரமோகன், பாலு, துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் ஏசி செந்தில்குமார், பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், கல்வி குழு தலைவர் அதிர்ஷ்டமணி ரவீந்திரன், அப்பாயின்மென்ட் குழு தலைவர் சந்திர போஸ், மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, நிர்மல்ராஜ்,
திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், , உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.