தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (27. 07. 2024) தலைமைச் செயலகத்தில், "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் மேற்கொண்டதோடு, காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.
அரசு துறைகளை தொடர்பு கொள்ளும் பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையினை அதிகரித்து அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.