பனிமய அன்னைக்கு பொன் மகுடம்: திரளான இறைமக்கள் வழிபாடு!

70பார்த்தது
பனிமய அன்னைக்கு பொன் மகுடம்: திரளான இறைமக்கள் வழிபாடு!
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு பனிமய அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 442-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4. 30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. தொடர்ந்து பகல் 12 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது.

பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்களை ஆயர் அணிவித்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருவிழாவில் காலை 7. 30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6. 15 மணிக்கு நற்கருணை பவனி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி