தங்கப்பதக்கம் என்ற ஐந்து வயது சிறுமிக்கு உற்சாக வரவேற்பு

79பார்த்தது
தூத்துக்குடியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி அன்விதா சிவகுமார் எல்கேஜி படித்து வருகிறார் இவர் கடந்த ஒன்றை வருடங்களாக ஐ பி என் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் மேலும் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்

இந்நிலையில் கடந்த மே 25, 26 ஆகிய தேதியில் இந்தோனேசியா ஜகார்த்தாவில் வைத்து சர்வதேச அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது இதில் இலங்கை மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ஸ்கேட்டிங் வீரர்கள் பங்கேற்றனர்

இதில் ஆறு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்விதா சிவகுமார் கலந்துகொண்டு 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்


இத்தகைய சாதனை படைத்து தூத்துக்குடிக்கு திரும்பிய சிறுமி அன்விதா சிவகுமாருக்கு ஸ்கேட்டிங் வீரர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதையொட்டி சிறுமி அன்விதா சிவகுமாருக்கு தேசியக்கொடி மற்றும் சால்வை அணிவித்து ஏராளமானோர் கௌரவித்தனர் இதை அடுத்து ஸ்கேட்டிங் வீரர்கள் கைகளை தட்டி ஆரவாரத்துடன் சாதனை வீராங்கனை ஆன்விதாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி