உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் இவர் தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில் தங்கி பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார் இவரிடம் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது சுபேயர் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் முகமது சுபயர் இன்று இரவு தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸெல் இல் பெட்ரோல் போட்டுவிட்டு வண்டியை கீழே இறக்கி ஆன் செய்துள்ளார் அப்போது திடீரென வண்டியில் பெட்ரோல் டேங்க் பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து தீ மளமளவன எரியத் துவங்கியது
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து முகமது சுபயர் சத்தம் போட அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள் அருகே இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்த தண்ணீரை ஊற்றி இருசக்கர வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர் இதில் இருசக்கர வாகனத்தின் முன்பக்க பகுதி முழுவதும் எரிந்து சேதமானது
தீ விபத்து ஏற்பட்டவுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அருகிருந்தவர்கள் தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது