தூத்துக்குடியில் சுமார் 3¼ கிலோ கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தாளமுத்துநகர் காமராஜர் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவில்பிச்சை மகன் செல்வேந்திரன் (57) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.