தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது

71பார்த்தது
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் அரிவாளுடன் திரிந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திரேஸ்புரம் பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவை சேர்ந்த பெலிக்ஸ் மகன் மெல்மர் (32), இனிகோ நகரை சேர்ந்த போஸ் (26) எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி