இந்து முன்னிலை கட்சியை சேர்ந்த 12 பேர் கைது!

84பார்த்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது இதைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நான்காயிரம் காவல் துறையினர் மாவட்டத்தின் எல்லை பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் வெளி மாவட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளே நுழையாத வண்ணம் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளை கைது செய்து வீட்டுக்கு காவலில் வைத்து வருகின்றது


தூத்துக்குடி மாநகர பகுதியில் தூத்துக்குடி காவல்துறையினர் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் இந்து முன்னணி ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரன் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒன்றிய பகுதி செயலாளர் முத்தமிழ்செல்வன் பழனியாண்டி, சிபு , கோபி, புருஷோத்தமன், பாலமுருகன் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 12 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி