தூத்துக்குடி: பக்தர்கள் பாதுகாப்பான முறையில் தரிசனை செய்யஏற்பாடு - காவல்துறை
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி திருவிழா கடந்த 02. 11. 2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07. 11. 2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08. 11. 2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. கடந்த 02. 11. 2024 அன்று கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர். 2 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் 07. 11. 2024 அன்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்கள் வசதிக்காக 18 இடங்களில் மொத்தம் சுமார் 20, 000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டும் என்றார்.