திருச்செந்தூர் - Thiruchendur

தூத்துக்குடி: மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடி: மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்தல் பயிற்சி

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீர்வளச் சூழலியல் மேலாண்மை துறையில் "மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்தல்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி 28. 10. 2024 அன்று நடத்தப்பட்டது. முதல்வர் ப. அகிலன், தலைமை ஏற்று தனது உரையில் "மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தலின்” முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பயிற்சி துவக்க விழாவில் பேராசிரியர் மற்றும் தலைவர் வே. ராணி, "மீன்கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தலின் பல்வேறு முறைகள், மீன் திரவ உரம் தயாரித்தல், கடல் பாசியிலிருந்து திரவ உரம் தயாரித்தல்" என்ற தலைப்பிலும் உதவி பேராசிரியர் து. மணிமேகலை, "உரம் தயாரிக்கும் செயல்முறையை அதிகப்படுத்தும் நுண்ணுயிரிகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். மேலும் "மீன் கழிவுகளுடன் மரத்தூள் மற்றும் கரும்புச்சக்கையை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் கடற்பாசி திரவ உரம் தயாரித்தல்" பற்றிய செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் காமராஜ் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி மற்றும் போப் கல்லூரி, சாயர்புரத்தை சேர்ந்த 44 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு 2 கைப்பிரதிகள், பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా