திருச்செந்தூரில் வைகாசி விசாகம்; லட்சக்கணக்கான பக்தர்கள்

75பார்த்தது
முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தை யொட்டி வைகாசி மாதம் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நள்ளிரவு 01-00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 01-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 06-00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி