தூத்துக்குடி அருகே உள்ள செட்டியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் நமச்சிவாயம் (77), இவர் நேற்று (ஜன்.2) காலை அங்குள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றபோது. எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.