முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜூலை மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. குறிப்பாக காலையில் 6: 15 முதல் 6. 50 மணி வரையும் அதைத் தொடர்ந்து 10 மணிக்கு மேலும் அதன்பின் மதியம் 12 மணிக்கு மேலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கான விவரத்தினை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜூலை மாதம் ஏழாம் தேதி வரை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாகவும் கும்பாபிஷேகத்தின் சிகர நிகழ்ச்சியான கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதே நேரம் புனித நீர் ஊற்றுவதற்கு அதிகாலை 6. 15 மணி முதல் 6. 50 மணி வரை நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு என்பதை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் அறிவித்துள்ளார்.