திருச்செந்தூரில் 75 அடி கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

72பார்த்தது
திருச்செந்தூர் கோவில் கடலானது சுமார் 75 அடி தூரம் உள்வாங்கியது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. திருச்செந்தூர் கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை ஒட்டிய கடலில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். 

கோவில் நாழிக்கிணர் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் கடல் சுமார் 75 அடி தூரம் உள்வாங்கி. கோவில் கடலானது அவ்வப்போது உள்வாங்குவதும் கடலில் வெளியேறுவதும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் கடல் நீரானது சுமார் 75 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இறந்த போதிலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் நீராடி வருகின்றனர். வரக்கூடிய பக்தர்கள் எவ்வளவு தூரம் கடல் நீர் உள்வாங்கியுள்ளது அந்த தூரம் வரை நடந்து சென்று கடலில் விளையாடி குளித்து வருகின்றனர். 

கடலானது உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறையில் கற்பூரம் ஏத்தி வழிபட்டு வந்தனர் பக்தர். கடல் உள்வாங்கி இருந்ததால் பக்தர்கள் உள்ளே சென்று பாறை மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சில பக்தர்கள் பாறைக்கு இடையில் உள்ள சிற்பிகளை சேகரித்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி