தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆழ்வார்திருநகரி, குரும்பூர் மற்றும் ஏரல் ஆகிய காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் நிலைய வளாக பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது ஆழ்வார்திருநகரி காவல் நிலைய சி. சி. டி. என். எஸ் பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. முருகானந்தம் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கிய பாராட்டினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஸ்டெல்லாபாய், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜானகி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. அமலோற்பவம், குரும்பூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பெபின் செல்வபிரிட்டோ, ஏரல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு. முகமது ரபிக், திரு. பழனிச்சாமி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.