ஆதியாக்குறிச்சி: விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு; 200பேர் கைது

56பார்த்தது
ஆதியாக்குறிச்சி: விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு; 200பேர் கைது
தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தொழில் நிறுவனம் அமைக்க ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு உடன்குடி, அதியாக்குறிச்சி, வெங்கட்ராமானுஜபுரம், குலசேகரன்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பை கண்டித்தும், தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் உடன்குடி பேரூராட்சி, அதியாக்குறிச்சி மற்றும் மாதவன்குறிச்சி ஊராட்சி பகுதி மக்கள், வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இன்று உடன்குடி பாரதி திடலில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போலீசார் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இதில் விவசாயச் சங்கத் தலைவர் சந்திரசேகர், வியாபாரிச் சங்கத் தலைவர் ரவி, அதிமுக உடன்குடி ஒன்றியச் செயலாளர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அமிர்தா எஸ் மகேந்திரன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி செட்டியாபத்து ராம்குமார், உடன்குடி ஒன்றிய தவெக செயலாளர் பத்ரிபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி