மக்களைதேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

553பார்த்தது
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் ஊக்கத் தொகையை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களைதேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது மேலும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பண பலன்களை அரசு வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். தங்களுக்குரிய சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் மேலும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பனபலன்களை உடனடியாக வழங்க வேண்டும் தாங்கள் பணியின் போது மன உளைச்சலுக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி