உடன்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் சின்னத்தம்பி (37). இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த சின்னதம்பி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரப்பட்டணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.