திருச்செந்தூர் வைகாசி விசாகத்தையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் 1500 பேருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சித. செல்லப்பாண்டியன் உணவு வழங்கினார்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வைகாசி விசாகத்தையொட்டி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காவடி தூக்கி, அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்த பாதயாத்திரையாக வந்தனர். தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் 1500 பேருக்கு உணவு தண்ணீர் பாட்டில் பிஸ்கட் ஆகியவற்றை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் நகரமன்ற தலைவர் பொறுப்பு மனோஜ், முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், வட்ட செயலாளர்கள் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.