புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வீரபாண்டியன் பட்டணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தவக்காலம் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் பலர் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் புனித வெள்ளிக்கிழமை அன்று மூட வேண்டும் என மதுவிலக்கு சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணத்தில் ஊர் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.