பேருந்தில் முதியவர் விழுந்து தற்கொலை: சிசிடிவி வீடியோ வைரல்

74பார்த்தது
திருச்செந்தூரில் அரசு பேருந்தில் முதியவர் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சி ஓன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்

திருநெல்வேலி ரவுண்டானா பகுதியில்

நேற்று முன்தினம் இரவு முதியவர் ஒருவர்

அரசு பேருந்தில் இடதுபுறம் பின்பக்க டயரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்

இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தற்கொலை செய்து கொண்டவர் யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இன்னும் இறந்தவர் யார் என்று தெரியாத நிலையில்

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி

போக்குவரத்து போலீசார் சார்பில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி