திருச்செந்தூரில் சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித் தலைவர் கி. செந்தில்ராஜ், தலைமையில் தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை நேற்று (06. 10. 2023) வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்றைக்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத்தொடர்ந்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களான தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், இனிப்பு மற்றும் மதியம் ஐந்து வகை உணவு வழங்கப்பட்டது.