திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பக்தர்களின் அவசர மருத்துவ உதவிக்காக திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர இலவச அவசர சிகிச்சை மையத்தினை ஆட்சியர். இளம்பகவத், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.