தமிழகத்தில் 2026ல் பாஜகவின் ஆட்சி மலரும்: ‍ அர்ஜுன் சம்பத்

528பார்த்தது
தமிழகத்தில் 2026ல் பாஜகவின் ஆட்சி மலரும்: ‍  அர்ஜுன் சம்பத்
இந்து மக்கள் கட்சி தலைவா் அர்ஜுன் சம்பத் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜவாஹா்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறாா் பிரதமா் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளாா். உலகப் பொருளாதார வலிமையில் தற்போது 3ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக ஆன பின்பு இந்தத் தோ்தலில் பாஜக 4 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 2026இல் தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலரும். தமிழகம்-புதுச்சேரியில் இருந்து வெற்றி பெற்றுள்ள 40 பேரும் இரு மாநிலங்களின் வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எம். ஜி. ஆா். , கருணாநிதி போன்ற தலைவா்கள் இதேபோல் செயல்பட்டுள்ளனா்.

ஆனால், முதல்வா் மு. க. ஸ்டாலின் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறாா். அதை அவா் மாற்றிக்கொள்ள வேண்டும். திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் ஹெச். சி. எல். நிறுவனா் சிவ் நாடாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தொடர்புடைய செய்தி