குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி சுகாதார துறையின் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குலசேகரப்பட்டினம் கடற்கரை அருகிலும் மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழு அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்