தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸாருக்கு இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆறுமுகநேரி அருகே கொம்புத்துறை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 60 இலட்சம் மதிப்பிலான 2250 கிலோ பீடிஇலைகள் ஈச்சர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.