தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

68பார்த்தது
தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1, 000/- உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்” வருகின்ற ஆகஸ்ட் மாதம் செயல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான முன்னேற்பாட்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வியிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி