திருமறையூர் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா!

71பார்த்தது
திருமறையூர் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா!
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகிலுள்ள திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சுற்றுச் சூழல் கரிசனைத் துறை மற்றும் திருமறையூர் மறுரூப ஆலயத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்தார்.

தென்னிந்திய திருச்சபை சினாட் மாமன்ற சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் இணை இயக்குனரும், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறையின் செயலாளருமான ஜாண் சாமுவேல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதைய டுத்து தொடர்ந்து ஆலய வளாகம் மற்றும் திருமறையூர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த வா ரத்திற்குள்ளாக ஆயிரம் மரக்கன்று கள் நடப்படுவதற்கானதிட்டம் வகுக் கப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட் டது.

தொடர்புடைய செய்தி