தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், த. வெ. க. தனித்து போட்டியிடுவது தி. மு. க. வுக்கு சவாலாக இருக்காது. த. வெ. க. வுக்கும் அ. தி. மு. க. வுக்கும் தான் போட்டி. அவங்க இரண்டு பேருக்கு இடையே வேண்டுமானால் சவாலாக இருக்கும். நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு. All the best. வெற்றி என்பது நிச்சயமாக தி. மு. க. கூட்டணிக்கு தான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது. விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்.