தட்டச்சு பள்ளிகளை நடத்துவோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

77பார்த்தது
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழக அரசு வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தட்டச்சு மூலம் தேர்வுகள் நடத்தப்படாமல் கணினி பயன்பாட்டில் மட்டுமே நடத்தப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 5000 தட்டச்சு பள்ளிகள் மற்றும் அதில் தட்டச்சு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் 2000 தட்டச்சு பொறி மெக்கானிக்கர்கள் மற்றும் அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் தட்டச்சு பயிலும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது

எனவே தமிழக அரசு இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தட்டச்சு பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி