தூத்துக்குடி-யில் சாலையில் சென்ற மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு.
தூத்துக்குடி வட்டகோவில் பகுதியை சார்ந்தவர் வீரபாண்டி மகன் ஜோசப் இவர் தூத்துக்குடி காய்கறி சந்தை அருகே தள்ளு வண்டியில் வைத்து சாலையோரம் பழக்கடை நடத்தி வருகின்றார் இந்நிலையில் இன்று அவர் தனது பழக்கடையில் இருந்து வீட்டிற்கு அவருக்கு சொந்தமான மின்சார இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி எட்டையபுரம் சாலை மேம்பாலத்தில் வழியாக சென்றுள்ளார் அப்போது மேம்பாலம் பகுதியில் வைத்து அவரது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீபற்றியது உடனடியாக வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு பதறியபடி நின்றார் அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு துறையினர் சாலையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து பெரும் விபத்தை தடுத்தனர்.
தூத்துக்குடி-யில் சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் திடிரெனெ தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் சிறிது நேரம் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.