தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான கடம்பா குளத்தில் வடிநீர் செல்லும் கால்வாயில் கட்டப்பட வேண்டிய புறையூர் பகுதி பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் கடம்பா குளத்தில் அமைந்துள்ள நான்காவது ஐந்தாவது ஆறாவது பாசன கால்வாய் பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் படியாக உடனடியாக கால்வாய்களை சரி செய்ய வேண்டும் மேலும் புறையூர் நெட்டையன் காலனி பகுதி ஆதிதிராவிட பகுதி மக்களுக்கு சுடுகாடு பாதையை உடனடியாக அமைத்து தர வேண்டும் குறுக்காட்டூர் பகுதி மக்களுக்கான குடிதண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது
உடனடியாக இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜூன் மாதம் பத்தாம் தேதி தென்திருப்பேரை மெயின் ரோட்டில் ஏழு கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்