மாணவி கடத்தல்: போச்சோவில் வாலிபர் கைது!

567பார்த்தது
மாணவி கடத்தல்: போச்சோவில் வாலிபர் கைது!
சாத்தான்குளம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.  


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து அவரது பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.  


விசாரணையில் சாத்தான்குளம் அருகே தாமரைமொழி வள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுப்பிரமணி(20) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி, மாணவியை கடத்தி சென்ற சுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து அவரை கைது செய்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி