தடை செய்யப்பட்ட புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

51பார்த்தது
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கம் பொதுமக்களிடையே ஏற்படுகின்றன. அவ்வாறான நோய்களின் தாக்கத்தினைக் கட்டுபடுத்திட தமிழகத்தில் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களைக் கள்ளச்சந்தையில் நமது மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்;டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி