விண்வெளி சவால் போட்டிகள்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

52பார்த்தது
விண்வெளி சவால் போட்டிகள்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடியில் விண்வெளி வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 25 அடி உயரத்தில் இருந்து செலுத்தும் முட்டை உடைக்காமல் கீழே இறக்கும் நானும் ஒரு விஞ்ஞானி என்ற விண்வெளி சவால் போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் கே. ஆனந்த், மண்டலம் ஜி, மண்டலம் XVIII, மண்டல துணைத் தலைவர் JFM பி. எஸ். சதீஷ் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். ஜேசிஐ தூத்துக்குடி ஹார்மோனியஸ் எலைட் அமைப்பு ஜாண்சன் பள்ளியில் நடத்திய இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 1 முதல் 5 வகுப்பு வரை, 6 முதல் 8 வகுப்பு வரை, 9 முதல் 12 வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியின் சிறப்பம்சமான வரி "சந்திரயான் 3 போன்ற உங்கள் முட்டையை தரையிறக்கு" என்பதால், மாணவர்கள் அறிவியல் திறன்களைப் பயன்படுத்தி முட்டையை உடைக்காமல் இருக்க சாதனங்களை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து உருவாக்கி முட்டையை தரைஇறக்கி காண்பித்தனர். ஒருநாள் முழுவதும் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டி தூத்துக்குடியில் நடத்தப்பட்ட முதல் போட்டியாகவும் தனித்துவமாகவும் இருந்தது. ஏரோடைனமிக்ஸ், இயற்பியல் மற்றும் பொறியியல் போன்ற STEM கருத்துகளைப் பற்றி மாணவர்கள் வேடிக்கையாகவும் ஊடாடும் வகையில் அறிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி