சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

574பார்த்தது
சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு ஶ்ரீ முத்துமாலை அம்மன் கோவிலின் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோவில் கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து கோவிலில் உள்ள அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவில் பிரசாதம் பெற்றுக்கொண்டனர். இந்த வருடாந்திர விழா கிராம மக்களின் ஒன்றுகூடல் மற்றும் பக்தி ஒற்றுமையை வலிமைப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி