சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு 14ம் தேதி ஒத்திவைப்பு

78பார்த்தது
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு 14ம் தேதி ஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.


இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து சாட்சிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த அனில்குமார் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி