திருச்செந்தூர்: ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்ல கோரிக்கை

57பார்த்தது
திருச்செந்தூர்: ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்ல கோரிக்கை
நெல்லை- திருச்செந்தூர் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடம் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் என பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை- திருச்செந்தூர் இடையே பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. 

இந்த அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 1 நிமிடம் மட்டுமே நின்று செல்கின்றன. எனவே பயணிகள், பொது மக்கள் நலன் கருதி நெல்லை- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடமாவது நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட தென்னக இரயில்வே அதிகாரிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் குறைந்தபட்சம் 2 நிமிடமாவது ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி