புதிய பேருந்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

542பார்த்தது
புதிய பேருந்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடியில் இருந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு இயக்கப்பட்ட புதிய பேருந்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி பஸ்நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை, சேர்வைக்காரன் மடம் ஊராட்சி வழித்தடத்தில் இயக்கம்படும் 52A மற்றும் 52F பழைய பஸ்களுக்கு பதில் புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது. இப்புதிய பேருந்துகளுக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவரும் மத்திய ஒன்றிய துணைச் செயலாளருமான ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் சேர்வைக்காரன் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய பஸ்களுக்கு மாலை அணிவித்தும் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய இளைஞரணி நாராயணண், கூட்டாம்புளி மொபட்ராஜன், கிளைச்செயலாளர்கள் ஜெயக்குமார், நாராயணண் வார்டு உறுப்பினர்கள்குணபாலன், சித்ரா மற்றும் கிளை நிர்வாகிகள் கருணாகரன், ஞானதுரை, செந்தூர்பாண்டி, கர்ணண், வினோத் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டணர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி