நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதா ஆலயத்திருவிழா வருகிற 06 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.
தூத்துக்குடி மறை மாவட்டம், பிரகாசபுரம் பங்கு புதுமைகளின் நாயகியாம், பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதாஆலய 145-வது திரு விழா வருகிற 06. 08. 2024 செவ்வாய் கிழமை மரியாள் தாழ்ச்சியின் சிக ரம் என்ற தலைப்பில் காலை 5: 40 மணிக்கு செபமாலை பவனி, திருப் பலி சோமநாதபேரி பங்குத்தந்தைஅருட்பணி ஜெகதீஸ் அடிகளார்
தலைமையில் நடைபெறுகிறது.
காலை ஜெபமாலை திருப்பலியைமின்வாரிய ஊழியர்களும், அனை த்து அன்பியங்களும் சிறப்பு செய் கின்றனர். மாலை 6: 30 மணிக்கு செபமாலை, கொடி பவனியும், மாலை 7மணிக்கு கொடியேற்றம்மறையுரை, நற்கருணை ஆசீர்மன்னார்புரம் பணிகளின் ஒருங்கி ணைப்பாளர் அருட்பணி நெல்சன் அடிகளார் தலைமையில் நடைபெ றுகிறது. மறையுரையை அருட்பணி ரெக்ஸ் லூமின் (கனடா) ஆற்றுகி றார். சிறப்பு விருந்தினராக பிரகாச புரம் தூய திரித்துவ ஆலய சேகரத்தலைவர் அருட்திரு எம். நவராஜ்கலந்து கொள்கிறார். முதலாம் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாக ஜாஸ் பேண்ட் கென்னடி இசைக் குழுவினரின் இசை சங்கமம் நிகழ்வு நடைபெறுகிறது.