ஆழ்வார்திருநகரி: நவதிருப்பதி கோவில்களில் மங்களாசாசனம்

73பார்த்தது
ஆழ்வார்திருநகரி: நவதிருப்பதி கோவில்களில் மங்களாசாசனம்
நவதிருப்பதிகளில் 9-ம் திருப்பதியும், குருவுக்கு அதிபதியுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் கோவிலில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும் ஆதிநாயகி, குருகூா்வல்லி அம்பாள்களும் அருள்பாளிக்கின்றனர். ஆன்மிக சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார்.

அவரது அவதாரத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 31- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஐந்தாம் திருநாளான காலையில் நம்மாழ்வார், நவதிருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி