தேர்வில் உதவி ஆட்சியராக தேர்வு பெற்றவருக்கு பாராட்டு!

64பார்த்தது
தேர்வில் உதவி ஆட்சியராக தேர்வு பெற்றவருக்கு பாராட்டு!
சாத்தான்குளம் அருகே குரூப் 1தேர்வில் உதவி ஆட்சியராக தேர்வு பெற்ற ஜெபிகிரேஷியா என்பவருக்கு ஐஎன்டியுசி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட வடக்கு உடைபிறப்பைச் சேர்ந்த தேவஆசீர்வாதம் - சுசிலா தம்பதியினரின் மகள் ஜெபிகிரேஷியா குருப் 1 தேர்வில் வெற்றி பெற்ற உதவி ஆட்சியராக தேர்வு பெற்றுள்ளார். இக்கிராமத்தில் இருந்து உதவி ஆட்சியராக தேர்வு பெற்ற ஜெபிகிரேஷியாவுக்கு ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில் பாராட்டு தெரிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநிலச் செயலர் லூர்து மணி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரணியன், ஆகியோர் அவரை பாராட்டி கௌரவித்து நினைவு கேடய பரிசு வழங்கினர். இதில் முதலூர் கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வகுமார், தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர்கள் அன்ன கணேசன், செல்வஜெகன், தெற்கு வட்டார செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டார்வின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி