இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு

55பார்த்தது
இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்
இன்று மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர்.  


புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அளிக்கிறார். நிறைவாக சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்து வருகின்றனர். கூட்டம் முடிந்ததும் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி